ஆண்கள் தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன..?

வயது அதிகம் கொண்டவர்கள் தான் தாடி வளர்க்க வேண்டும், தாடி வளர்த்தால் சுகாதாரமாக இருக்க முடியாது போன்ற பல்வேறு விஷயங்கள், தாடி வளர்ப்பவர்களுக்கு எதிராக கூறப்படுகிறது. ஆனால், தாடி வளர்ப்பதால், பல்வேறு நன்மைகள் உள்ளது. குறிப்பாக தாடி வளர்ப்பவர்களை பெண்களுக்கு அதிகம் பிடிப்பதாக, ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சரி வாங்க மற்ற நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

தாடியால் வரும் நன்மைகள்:

தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், அறிவாற்றல் திறனை அதிகரிப்பதற்கும், தாடியை வளர்க்கலாம்.

முகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சூரிய ஒளி கதிர்களை, முகத்தில் படாவிடாமல் தடுப்பதற்கு தாடி பயன்படுகிறது.

தாடி அதிகம் இருந்தால், முகம் வயதானவரை போன்று காட்சியளிக்கும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், உண்மையில் சொல்லப்போனால், தாடி வளர்த்தால், முகம் இளமையுடன் இருக்குமாம். அதாவது, வயது அதிகரிக்கும்போது, முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அந்த சுருக்கங்களை குறைப்பதற்கு, தாடி உதவும்.

நன்றாக ஷேவிங் செய்து முகத்தை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களை விட தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தாடி வளர்க்கும் ஆண்கள் மற்றவர்களை விட எளிதில் பெண்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.

முகப்பரு போன்ற முகம் தொடர்பான பிரச்சனைகள், தாடி வளர்த்தால் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அளவுக்கு அதிகமாக முகப்பரு இருந்தால், தாடி வளர்க்க தொடங்குங்கள்.

ஷேவிங் செய்யும்போது சருமத்தில் உள்ள துளைகள் திறக்கும். சிலருக்கு சரும வறட்சியும் ஏற்படும். அதனால் கோடை, குளிர் காலத்தில் சருமத்தில் உள்ள துளைகள் ஈரப்பதத்தை இழக்கக்கூடும். தொடர்ந்து தாடி வளர்க்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

தாடி வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் தான். ஆனால், அதனை எவ்வாறு நேர்த்தியாக பராமாரிக்கிறோமோ அதனை பொறுத்து தான், நம் அழகு வெளிப்படும்.

Recent Post