உருளைக் கிழங்கின் சிறப்பான மருத்துவக்குணங்கள்

காய்கறிகளில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவது உருளைக் கிழங்கு தான் அதில் சிறப்பான மருத்துவக்குணங்கள் உள்ளது. உருளைக்கிழங்கை போல் வேறு எந்த காய்கறிகளையும் சமைத்து சாப்பிட முடியாது.

உருளைக்கிழங்கில் புரதம், கொழுப்புச்சத்து, நார்சத்து, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A, வைட்டமின் B , வைட்டமின் C பொட்டாசியம், சோடா உப்பு ஆகியவை இருக்கிறது.

அரிசி, கோதுமை ஆகியவற்றிக்கு அடுத்த படியாக அதிகமாக சாப்பிடுவது உருளைக்கிழங்குதான் என புள்ளி விவரங்கள் கூருகின்றன. எல்லா தட்ப வெப்ப நிலைகளிலும் விளையும். அதனால் உலகின் எல்லாப் பாகங்களிலும் இது விளைகிறது.

Advertisement
urulaikilangu benefits in tamil

உருளைக்கிழங்கின் தனிச்சிறப்பு என்னவென்றால் அதை சமைத்து சாப்பிடும்போது அதில் இருக்கும் சத்துக்கள் அழியாமல் அப்படியே நமக்கு கிடைக்கும்.

இரத்தம் கெட்டுபோதல், மலச்சிக்கல், சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.

உருளைக்கிழங்கு மிக விரைவாக செரிமானமாகும். அதனால்தான் மட்டன் குழம்பு, மட்டன் குருமா வைக்கும்போது உருளைக்கிழங்கையும் சேர்த்து சமைக்கிறார்கள்.

இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.