தூக்கம் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சனை, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, சரியான நேரத்தில் உறங்காமல் இருப்பது போன்ற பல காரணங்கள் உண்டு.
எந்த ஒரு பிரச்சனைக்கும் உணவு ஒரு தீர்வினை கொடுக்கும். அவ்வாறு ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் சில உணவுகளை இங்கு பார்ப்போம்.
பாதாம் பருப்பு
இரவு படுப்பதற்கு முன்பு அல்லது பகலிலோ சிறிதளவு பாதாமை எடுத்துக் கொள்வது நல்லது. இதில் தூக்கத்தை ஊக்குவிக்கும் மெக்னீசியம், கனிமம் அதிகமாக உள்ளது. மேலும் இதிலுள்ள மெலடோன், ஹார்மோன் தூக்கத்தை ஊக்குவிக்கும்.
இவை நீண்டநேர மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். இதனால் மூளை மற்றும் நரம்புகளுக்கு மிக மிக ஆரோக்கியமாக இருக்கும். ட்ரிப்டோபன் அமினோ செயல்பாட்டை அதிகரித்து தூக்கம் தடைபடுவது நிறுத்தப்படும்.
நிம்மதியான தூக்கம் வருவதற்கு சில டிப்ஸ்
வாழைப்பழம்
விலை குறைவாக அனைவருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய பொருள் வாழைப்பழம். தூக்கமின்மை பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள ட்ரிப்டோபன் அமினோ மூளைக்கு வேலை கொடுத்து நல்ல தூக்கம் வர இது உதவும்.
சாமந்தி டீ
சாமந்தி டீ பருகுவதால் இதிலுள்ள அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடன்ட் மூளைக்கு செல்லும் நரம்புகளை நன்றி ஊக்குவித்து நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
பால்
தினமும் பால் அருந்துவது உடலுக்கு நல்லது. வெறும் பால் மட்டும் அருந்தாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நல்ல தூக்கம் வரும். இதில் டிரிப்டோபன் அமினோ அதிகமாக இருப்பதால் இடையூறு இல்லாத தூக்கத்தை அனுபவிக்கலாம்.
பாலில் வெல்லத்தை கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
ஓட்ஸ்
பொதுவாக இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. ஓட்ஸ் உணவு எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த உறக்கத்தையும் இது அளிக்கும். இதில் மன அழுத்தத்தை குறைக்கும் விட்டமின் பி6 அதிகமாக இருக்கிறது.