“முடிஞ்சா பயப்படுங்க மக்களே” – இன்று மாலை வெளியாகும் சுவாரசியமா பிக்கிலி அப்டேட்
இசையமைப்பாளர், நடிகர், பாடகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்ற பன்முகத்தன்மை கொண்டவர்தான் விஜய் ஆண்டனி. கடந்த சில வருடங்களாக தனது மனைவி பாத்திமாவின் தயாரிப்பில் நடித்துவரும் இவர் தானே இயக்கி வெளியிட உள்ள படம் தான் பிச்சைக்காரன் 2.
சில வருடங்களுக்கு முன்பு சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்று தலைப்பில் வெளியான படம், மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவித்த நாளிலிருந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமானது.
சில மாதங்களுக்கு முன்பு பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் பணிகளும் தொடங்கியது, இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்படும் பொழுது அதிவேக போட்டில் இருந்து விஜய் ஆண்டனி தவறி விழுந்து அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதும், பிறகு சிகிச்சை முடிந்து படபிடிப்புக்கு திரும்பியதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிச்சைக்காரன் 2 படத்திற்கான அப்டேட் வெளியானது. தற்பொழுது தனது படத்தில் வரும் ஒரு பாடலை குறித்தும் ஒரு கதாபாத்திரத்தை குறித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார், ட்வீட் பின்வருமாறு…
இந்த படத்தின் மிக முக்கியமான பிக்கிலி என்ற கதாபாத்திரத்தை விரைவில் அறிமுகம் செய்வார் என்று தெரிய வந்துள்ளது
