Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

பாகிஸ்தானையும் சீனாவையும் அலறவிட்ட பிபின் ராவத்தின் கதை

bipin rawat story in tamil

தெரிந்து கொள்வோம்

பாகிஸ்தானையும் சீனாவையும் அலறவிட்ட பிபின் ராவத்தின் கதை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய முப்படைகளின் தளபதியும், முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் (Bipin Rawat) சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gen bipin rawat history tamil

முன்னாள் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கடந்து வந்த பாதை குறித்து இப்போது பார்க்கலாம்.

இவரது இயர் பெயர் பிபின் லக்ஷ்மண் சிங் ராவத் CDS General, இவர் ராஜ்புட் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் குடும்பத்தில் பல தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கஹ்வால் மாவட்டம், சின்ஜ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது இளமை கால கல்வியை டெக்ராடூனிலும், சிம்லாவிலும் படித்தார்.

பின்னர் மஹாராஷ்டிரா மற்றும் டெக்ராடூனில் உள்ள இந்திய ராணுவபள்ளியிலும் பயின்றார். பின்னர் நிலகிரி மாவட்டம் குன்னரில் உள்ள ராணுவ சர்வீஸ் பணியாளர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் ராணுவ கல்லூரியில் ஹையர் கமெண்ட் பயிற்சியை பெற்றார். பின்னர் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் ராணுவ படிப்பில் எம்பில் பட்டம் பெற்றார்.

கடந்த 2011ம் ஆண்டு இவருக்கு மீரட்டில் உள்ள சவ்ரி சவஹால் பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார்.1978ம் ஆண்டு இவரது ராணுவ வாழ்க்கை துவங்கியது. அப்போது தன் தந்தை பணியாற்றிய குழுவிலேயே இணைந்தார். பிறகு டேராடூனிலுள்ள இந்திய ராணுவப் பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை வகித்தார்.

மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராகவும் பிபின் ராவத் பணியாற்றியுள்ளார். மேலும், ராணுவச் செயலர் பிரிவில், துணை ராணுவச் செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பிபின் ராவத் படிப்படியாக உயர்ந்து முப்படை ராணுவத்தின் தளபதியாக உயர்ந்துள்ளார். இவர் தான் இந்தியாவின் முதல் முப்படை ராணுவ தளபதியாவார். இதற்கு முன்னர் மூன்று படைகளுக்கும் வெவ்வேறு தளபதிகள் இருந்தார்கள்.

இவர் உயர்ந்த மலைகளின்மீது போர் புரிதலிலும், ஆட்சிக்கு எதிரான ஆயுதக்குழுக்களை ஒடுக்குவதிலும் கைதேர்ந்தவராகச் செயல்பட்டார். நாடு முழுவதும் பல்வேறு ராணுவப்படைகளுக்குத் தலைமை தாங்கியதோடு, ராணுவம் குறித்த கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தார்.

bipin rawat story in tamil

2008-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சார்பாக காங்கோ நாட்டுக்கு அனுப்பப்பட்ட அமைதிக்குழுவில், இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராகச் சென்றார். இவரது தலைமையின் கீழ் அமைதிக்குழு மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. அதுவரை அமைதியாக இருந்த இந்தியாவின் அணுகுமுறை, அவரின் தலைமைக்குப் பிறகு இரும்புக்கரம் கொண்டதாக மாறியதாகவும் அந்த அமைதிக்குழுவில் இருந்தவர்கள் அவரைப் பற்றி கருத்து தெரிவிக்கின்றனர்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதியன்று, இந்திய ராணுவத்தின் 27-வது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தலைமைத் தளபதியாகப் பதவியேற்பதற்கு முன்பு, துணைத் தலைமைத் தளபதியாகப் பணியாற்றிவந்தார். இவருடைய பல்வேறு பணிகளை சிறப்பாக செய்ததற்காக பதக்கங்கள், பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ராணுவத்தில் இவர் செய்த முக்கியமான பணி என்றால் இந்திய ராணுவம் நடத்திய உரி தாக்குதலுக்கான பதிலடிதான். இந்தியா மட்டுமல்ல உலகத்தையே ஒரு நொடி திரும்பி பார்க்க வைத்தவர். ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில் பாகிஸ்தானிற்குள் நுழைந்து இந்திய ராணுவத்தினர் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற விஷயத்தை திட்டமிட்டு தலைமையேற்று நடத்தியவர் இவர். அந்த தாக்குதலுக்கு பின்பு உலக அரங்கில் இந்தியா ராணுவத்திற்கான மதிப்பு அதிகமாகிவிட்டது.

ராணுவ உடையில் இல்லாதபோது பிபின் ராவத் ஓர் அமைதியான ஜென்டில்மேன். சீருடை போட்டுவிட்டால் அவர் டெர்ரர் என்றே சொல்லலாம். இளம் அதிகாரியாக இருந்தபோதே அப்படித்தான். 1987-ம் ஆண்டு அருணாசலப் பிரதேச எல்லையில் சும்தோராங் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றது. அப்போது சிறிய படையை வைத்துக்கொண்டு அவர்களை எதிர்த்தார் பிபின் ராவத். 1962 சீனப் போருக்குப் பிறகு சீனாவுடன் நிகழ்ந்த மிகப்பெரிய மோதலாக அது கருதப்பட்டது. ‘யார் இந்த ராவத்’ என்று அப்போதே கேட்க வைத்தார்.

2015 ஜூன் மாதத்தில் இந்திய ராணுவம் மிக மோசமான ஒரு பேரிடியை சந்தித்தது. நாகாலாந்து தீவிரவாத அமைப்பு ஒன்று, மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. 18 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தார்கள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாதுகாப்பாக மியான்மர் நாட்டு காடுகளில் சென்று பதுங்கினார்கள். இந்திய ராணுவம் இதை ஒரு கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டது. உடனடியாக மியான்மர் காடுகளில் நுழைந்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி, அந்த தீவிரவாதிகளைக் கொன்றது. அந்தத் தாக்குதலை நடத்தியவர், அப்போது லெப்டினென்ட் ஜெனரலாக இருந்த பிபின் ராவத். அப்போது நாகாலாந்தில் இருந்த நேரத்தில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார் ராவத்.

பிபின் ராவத் தனது திறமையான சேவைக்காக பரம் விசிஷ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஷ்ட் சேவா, விசிஷ்ட் சேவா, யுத் சேவா மற்றும் சேனா உள்ளிட்ட 18 விதமான பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் ஆவார். இவர்களுக்கு கிருத்திகா ராவத் என்பவர் உள்ளிட்ட 2 மகள்கள் உள்ளனர்.

==================

ராணுவத்தில் பிபின் ராவத் வகித்த பதவிகள்:

  • 1978ல் இரண்டாம் லெஃப்டனென்ட்
  • 1980ல் லெஃப்டனென்ட்
  • 1984ல் கேப்டன்
  • 1989ல் மேஜர்
  • 1998ல் லெஃப்டனென்ட் கர்னல்
  • 2003ல் கர்னல்
  • 2007ல் பிரிகேட்டியர்
  • 2014ல் லெஃப்டனென்ட் ஜெனரல்
  • 2017ல் ஜெனரல்
  • 2019ல் சிடிஎஸ் (முப்படை தளபதி)

பிபின் ராவன் வாங்கிய பதக்கங்கள்:

  • Param Vishisht Seva Medal,
  • Uttam Yudh Seva Medal,
  • Ati Vishisht Seva Medal,
  • Yudh Seva Medal Sena Medal,
  • Vishisht Seva Medal,
  • Wound Medal,
  • Samanya Seva Medal,
  • Special Service Medal,
  • Operation Parakram Medal,
  • Sainya Seva Medal,
  • High Altitude Service Medal,
  • Videsh Seva Medal,
  • 50th Anniversary of Independence Medal,
  • 30 Years Long Service Medal,
  • 20 Years Long Service Medal,
  • 9 Years Long Service Medal,
  • MONUSCO

இப்படி ஒரு மாபெரும் வீரரை இழந்த இந்தியா ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தெரிந்து கொள்வோம்

Advertisement
Advertisement
To Top