இயக்குனர் ஷங்கருக்கு பிறந்தநாள் – குவியும் வாழ்த்துக்கள்.

28 வருடங்களாக தமிழ் திரையுலகில் வெற்றிநடை போட்டு வரும் இயக்குனர் ஷங்கர் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஷங்கர். 1993-ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஜெண்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களை இயக்கினார்.

tamil cinema news

பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களையே இயக்கி வருவதால் பலரும் அவரை ‘பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்’ என்றே அழைக்கிறார்கள்.

Advertisement

வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி உட்பட வெயில், அறை எண் 305ல் கடவுள், ஈரம் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’, ராம்சரண் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் புதிய படம், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் ஷங்கர்.

இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் 28 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிநடை போட்டு வரும் ஷங்கருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.