பாகற்காய் பொடி மாஸ் செய்முறை

தேவையானவை:
நீள பாகற்காய் & 1/4
வெங்காயம் – 1
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 1டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 3,
கடுகு – 1டீஸ்பூன்,
சீரகம் – 1டீஸ்பூன்,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
புளிகரைசல் – 2 டேபிள்ஸ்பூன்,
கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 1டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – தேவைக்கு,
உப்பு – தேவைக்கு.
செய்முறை: பாகற்காயை விதை நீக்கி துருவிக்கொள்ள வேண்டும். பின் அத்துடன் தயிர், மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள் உப்பு கலந்து பிசிறி 10 நிமிடம் வைக்க வேண்டும். பின் அதை இட்லி தட்டில் வேக விட்டு வெந்த பின் அதில் புளி கரைசல் விட வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், சீரகம் தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கி அத்துடன் பாகற்காயை சேர்த்து நீர் வற்றியதும், தேங்காய் துருவல் கேரட் துருவல் சிறிது உப்பு சேர்த்து 2 முறை கிளறி அதில் சர்க்கரையை தூவி இறக்க வேண்டும். கசப்பே தெரியாது. (நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற பொடி மாஸ்).