ஐஸ் வாட்டரில் கோமியம் கலந்து குடித்தால் கொரோனா போயிரும் – பாஜக விஞ்ஞானியின் அற்புத கண்டுபிடிப்பு

இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என மக்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு உலகநாடுகள் மருந்துகள் மீது கவனம் செலுத்திவருகிறது. ஆனால் இந்தியாவில் பாஜக விஞ்ஞானிகள் மாட்டு மூத்திரத்தை வைத்து ஒவ்வொரு நாளும் புதுப்புது மருந்துகளை சொல்லி வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சி எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் கூட பேசிவருவதுதான் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில பாலியா மாவட்டம் பெய்ரியா தொகுதி எம்.எல்.ஏ சுரேந்திர சிங்.வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் பசுவின் கோமியத்தை ஜில் தண்ணீரில் மிக்ஸ் செய்து குடிக்க வேண்டும். இப்படி மிக்ஸ் பண்ணி குடிச்சா கொரோனா வரவே வராது என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.