பாம்பே ஜெயஸ்ரீக்கு லண்டனில் நடந்த விபத்து – இப்பொது என்ன நிலவரம்?

பாம்பே ஜெயஸ்ரீ கொல்கத்தாவில் கடந்த 1965ம் ஆண்டு பிறந்த ஒரு மிகப்பெரிய கர்நாடக சங்கீத வித்துவான். ஆரம்ப காலகட்டத்தில் தமிழில் ஐயா எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுடைய சில பக்தி பாடல்கள் ஆல்பத்தில் பாடியுள்ளார்.
அதன் பிறகு 1983ம் ஆண்டு சிவகுமார் நடித்த “தம்பதிகள்” என்ற திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் ஐயா அவருடைய இசையில் சில பாடல்களை பாடியவர், பெருமளவில் புகழ்பெற்றது ரகுமான் அவர்களுடைய இசையில் வெளியான இருவர் படத்தில் வரும் “நறுமுகையே நறுமுகையே” பாடல் தான்.
அன்று தொடங்கி இன்று வரை பல சிறந்த பாடல்களை அவர் தமிழில் தொடர்ச்சியாக பாடி வருகிறார் குறிப்பாக “வசீகரா”, “ஒன்றா இரண்டா ஆசைகள்”, “யாரோ மனதிலே” போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்கள் இவருடைய குரலில் ஒளித்தவைதான்.
2013ம் ஆண்டு லைப் ஆஃப் பை படத்தில் இவர் பாடிய ஒரு பாடலுக்காக இவர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பதை குறிப்பிடத்தக்கது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல பாடல்கள் பாடியபோது இவர் அதிகப்படியான பாடல்களை பாடியது தமிழில் தான்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு இசை கச்சேரிக்காக லண்டன் சென்றிருந்தவர் எதிர்பாராத ஒரு விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநலவை இழந்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் அவருடைய மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக கூறப்பட்டது.
தற்போது சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள தகவலின் படி அவர் லண்டனில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும். அவர் உடல்நிலை நல்ல முறையில் தேறி வருவதாகவும் கூறியுள்ளனர்.
ஒரு சில நாட்கள் அவருக்கு நல்ல ஓய்வு தேவைப்படுகிறது என்றும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அறிவித்துள்ளனர்.