விக்ரமுனுக்கு படப்பிடிப்பில் எற்பட்ட எலும்பு முறிவு.. தங்கலான் படப்பிடிப்பு ஒத்திவைப்பு!

தமிழ் திரையுலகை பொருத்தவரை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு ஈடு கொடுத்து பல ரிஸ்க்கான காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கும் வெகு சில நடிகர்களில் விக்ரம் அவர்களும் ஒருவர். ஒரு படத்திற்காக அவர் மேற்கொள்ளும் சிரத்தை என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் பொன்னின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு, நேற்று சென்னையில் தொடங்கிய தங்கலான் படப்பிடிப்புக்கு சென்று நடிக்க துவங்கினார் சியான் விக்ரம். இந்நிலையில் படபிடிப்பின் போது நடத்தப்பட்ட ஒரு ஒத்திகையில் அவர் கீழே விழுந்து விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் நல்ல உடல் சுகத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறிது காலம் தங்கலான் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் அவர்களுடைய மேலாளர் சூர்யா நாராயணன் பேசுகையில் அவர் நலமுடன் இருப்பதாகவும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கும் வியத்தகு வரவேற்புக்கும் விக்ரம் தனது நன்றிகளை தெரிவித்தார் என்றும் சூரியநாராயணன் கூறினார்.