Search
Search

“கங்கனா செய்ததை எப்போதும் மறக்கமாட்டேன்” – சந்திரமுகி அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்

பிரபல இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் இளைய திலகம் பிரபு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் காட்டி நடித்து வெளிவந்த திரைப்படம் தான் சந்திரமுகி. ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம்.

சந்திரமுகி, சூப்பர் ஸ்டாரின் சினிமா பாதையில் ஒரு மைல் கல் என்றே கூறலாம், இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் லாரன்ஸ் மாஸ்டர் நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம்.

பாம்பேயில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது, 20 நாள் படப்பிடிப்பு அங்கு முடிந்துள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பாம்பேயில் நடந்த சந்திரமுகி 2 படப்பிடிப்பில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது பகுதியை நடித்து முடித்துள்ளார்.

கடந்த மார்ச் 15ம் தேதி தான் வெற்றிகரமாக சந்திரமுகி படத்திற்கான படப்பிடிப்பை முடித்ததாக ஒரு ட்வீட் ஒன்றை கங்கனா வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த லாரன்ஸ் அவரோடு பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும். மும்பையில் படப்பிடிப்பு நடந்தபோது தனது சொந்த ஊரை மிஸ் செய்ததாகவும், ஆனால் கங்கனா தனக்கு தினமும் சுவைமிகுந்த உணவுகளை வழங்கியதை எப்போதும் மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

You May Also Like