கை தட்டுவதில் கூட இவ்வளவு நன்மைகள் இருக்கா..!

மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் பிறரை பாராட்டுவதற்கும் கைத்தட்டல் முறையை நாம் பயன்படுத்துகிறோம். கைதட்டல் தானே இதுல என்ன பெருசா இருக்கப்போகுது என்று எண்ண வேண்டாம்.

இந்த கைத்தட்டல் ஒரு சிகிச்சை முறை என்பதும், அது பரவலாக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து தினசரி நாம் கை தட்டுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 50 முறை கை தட்டலாம். கைகளில் நீட்டியும் அல்லது மேலே தூக்கியும் தட்டலாம்.

தினமும் கைதட்டல் பயிற்சி செய்வதால் தூக்கமின்மையை விரட்டுகிறது. உடலில் உள்ள நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது. கண் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

கைதட்டல் பயிற்சி செய்வதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.

தினமும் அரை மணி நேரம் கை தட்டுவதால், சர்க்கரை நோய், ஆர்த்ரைட்டிஸ், தலைவலி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் சோகமான மனநிலை ஏற்படும் போது இந்த கைதட்டல் பயிற்சியை செய்து வந்தால் மனநிலையில் மாற்றம் உண்டாகி உற்சாகமான மனநிலைக்கு திரும்புவார்கள்.

குழந்தைகளுக்கு கைதட்டும் பயிற்சியை சொல்லிக் கொடுப்பதால் அவர்களுக்கு எழுதுவது, ஓவியம் வரைவது போன்றவற்றில் திறமைகள் வளரும்.

Recent Post