தெற்கு ரயில்வே பணியாளர்கள் 80 பேருக்கு கொரோனா

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் 80 அதிகாரிகள் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

மே 1ம் தேதி முதல் நாடு முழுவதும் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் சில அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.