தளபதி விஜய் போல மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் போலவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ் மேன் டேவிட் வார்னர் மாறியிருக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி லைக்குகள் குவித்து வருகிறது.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் தர்பார் படத்தில் வரும் ரஜினி மற்றும் பாகுபலி படத்தில் வரும் பிரபாஸ் போல் மாறி வீடியோக்களை வெளியிட்டார்.

தற்போது விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற “செல்லா குட்டி” பாடலில் டேவிட் வார்னர் இடம்பெறும் ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement