ஏ.ஆர். ரகுமான் இசை.. விறுவிறுப்பாக உருவாகும் தனுஷ் 50 – பல தகவல்கள் உள்ளே!

சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் நடிகர் தனுஷ். கடந்த 21 ஆண்டு காலமாக தமிழ் துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார்.
தற்பொழுது இவருடைய நடிப்பில், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமான கேப்டன் மில்லர் மீது மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தனுஷ் நடிப்பு மட்டுமல்லாமல் 2012ம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் Wunder Bar என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தையும் அறிமுகம் செய்தார்.
அந்த நிறுவனத்தின் கீழ் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது, அதேபோல 2017ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பா பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் அவர் ஒரு இயக்குனராகவும் அறிமுகமானார்.
மேலும் விரைவில் துவங்கவுள்ள அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதும் அனைவரும் அறிந்ததே.
தற்போது இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால், காளிதாஸ் மற்றும் சுந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனது கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது