Search
Search

தனுஷ் மீனா விவகாரம் : “பயில்வான் கிளப்பிய புரளி” – இரண்டவது திருமணம் குறித்து மீனா பேச்சு

நடிகை மீனா சுமார் 40 ஆண்டு காலமாக தமிழ் திரை உலகில் நடித்து வருகிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் உள்ளிட்ட அனைத்து டாப் ஹீரோக்களுக்கும் இவர் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு இவர் திரையுலகில் கால் பதித்து 40 ஆண்டுகள் கடந்ததை பெரும் விழாவாக கொண்டாடினார்கள். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தலைமையேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீனா கடந்த 2009ம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை மணந்த நிலையில் சென்ற 2022ம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவால் காலமானார். மீனாவிற்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளார். இவர் விஜயவுடன் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இது ஒருபுறம் இருக்க சில தினங்களுக்கு முன்பு பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், தனுஷ் மற்றும் மீனா தனியே வாழ்ந்து வருவதால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளபோவதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது என்றும், ஆனால் அது குறித்த உண்மை நிலை தனக்கு தெரியாது என்று கூறியிருந்தார்.

தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள மீனா, என் கணவர் இறந்து விட்டார் என்பதை இன்றளவும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் இப்படி பேச இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றது என்று குமுறியுள்ளார்.

மேலும் என் நைனிகாவின் எதிர்காலமே எனக்கு முக்கியம் என்றும், இடையில் பட வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

You May Also Like