தல தோனி தயாரிக்கும் “Let’s Get Married” திரைப்படம் – ருசிகர அப்டேட் இதோ!

ஒரு குறிப்பிட்ட துறையில் சாதித்து மிகப்பெரிய உயரங்களை தொடும் பலர் வேறு ஒரு துறையில் களம் இறங்குவது என்பது புதிதல்ல. அதிலும் குறிப்பாக உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களாக இருக்கும் ஒருசிலர் பிற்காலத்தில் அரசியல்வாதிகளாகவும், நடிகர்களாகவும் மாறி வருகின்றனர்.
அந்த வகையில் கிரிக்கெட் துறையில் செல்லமாக “தல” என்று அழைக்கப்படும் தோனி, தற்பொழுது திரைப்பட தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் முதல் முதலில் தயாரித்திருப்பது ஒரு தமிழ் திரைப்படம் என்பதை நாம் அறிவோம்.
மூத்த நடிகை நதியா, பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் லவ் டுடே படம் மூலம் பிரபலமான இவானா மற்றும் பல முன்னணி நடிகர்களை கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான் LGM அதாவது Let’s Get Married என்ற படம்.
இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது, தற்பொழுது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட பணிகள் தற்பொழுது துவங்க உள்ளது. இந்த படம் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.