அருள்நிதி நடிக்கும் ‘டைரி’ படத்தின் டீசர் வெளியானது

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இவர் நடித்த மௌன குரு, டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், K – 13 என த்ரில்லர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் தற்போது டைரி படம் இணைந்துள்ளது.

அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த இன்னாசி பாண்டியன் டைரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

https://youtu.be/dTaxY1duHl0