Search
Search

இதுதான் ஏ.ஆர் ரகுமானின் உண்மையான குணம் – மனம் திறந்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

அது கோலிவுட் முழுக்க இசைஞானியின் இசை நிறைந்திருந்த காலகட்டம், அப்போது ஒரு சிறிய பூவாக மலர்ந்து, இன்று விஸ்வரூபம் எடுத்துள்ள மாபெரும் கலைஞர் தான் ஏ.ஆர் ரகுமான். இவருடைய இந்த விஸ்வரூப வளர்ச்சிக்கு இவர் இசையமைத்தது மட்டுமே காரணம் என்றால் அதை நிச்சயம் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ரகுமான் இந்த அளவிற்கு ஒரு மாபெரும் கலைஞராக வளர்ந்து நிற்பதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய நல்ல குணம். தான் கையில் எடுக்கும் எந்த ஒரு திரைப்படத்தையும், பெற்ற பணத்திற்காக வேலை செய்யாமல் ஆத்மார்த்தமாக வேலை செய்யும் ஒரு மாபெரும் குணம் ரகுமான் அவர்களிடம் உண்டு.

அந்த வகையில் மாமன்னன் திரைப்படத்திற்கு அவர் இசையமைத்தது குறித்து ஒரு சுவையான நிகழ்வை பகிர்ந்துள்ளார் மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ். பிரபல தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்த ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது, “ரகுமான் அவர்கள், மாமன்னன் படத்திற்கு இசையமைப்பதற்கு முன் அந்த படத்தை காண வேண்டும் என்று கூறியிருந்தார்”.

“ஆனால் அப்பொழுது நான் வாழை படத்தின் படப்பிடிப்பிற்காக திருநெல்வேலியில் தங்கி இருந்தேன், நான் சென்னையில் அவர் படத்தை பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியும் அவர் என்னுடன் அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும் என்று கூறி நேரடியாக திருநெல்வேலிக்கு வந்து என்னுடன் ஒரு நாள் தங்கி படத்தைக் கண்டு என்னை பாராட்டி சென்றார்”.

“என் மண்ணில், எனக்காக வந்து, என் படத்தை கண்டு அவர் பாராட்டி சென்ற விதம் எனக்கு பிடித்தது. இதற்கு மேல் எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அந்த நிகழ்வு அமைந்தது” என்று நெகிழ்ந்து பேசினார் மாரி செல்வராஜ்.

தான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயத்திற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் ஒரு மாபெரும் குணம் ரகுமானிடம் தொடர்ச்சியாக இருப்பதால் மட்டுமே அவர் இந்த உயரத்தில் நிற்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை.

You May Also Like