Search
Search

“எனக்காக அதைச் செய்தார்”.. தங்கலான் – விக்ரமை வியந்து பாராட்டிய இயக்குநர்!

பல நூறு ஆண்டுகளாக நமது தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வாழும் மக்களுக்காக தொடர்ந்து தனது குரலை ஓங்கி ஒலித்து வரும் வெகு சில இயக்குனர்களின் முதன்மையானவர் பா. ரஞ்சித். தற்பொழுது இவருடைய இயக்கத்தில் முதல் முறையாக முன்னணி நடிகர் சீயான் விக்ரம் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இயக்குநர் ரஞ்சித், இந்த படம் குறித்தும், நடிகர் விக்ரம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். “சுமார் 6 முதல் 7 மாத காலங்கள் பிற படங்கள் எதையும் ஒத்துக்கொள்ளாமல் எனக்காக, இந்த படத்திற்காக காத்திருந்தார் விக்ரம்”.

“சில நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் என்னை அழைத்து, இந்த படம் எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தருகிறது. உங்களுடைய இயக்கும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறினார்”. “மேலும் சுமார் 105 நாட்கள் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றும் இன்னும் 20 நாட்களுக்கான படபிடிப்பு பணிகள் மீதம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு தங்கலான் படபிடிப்பின் போது, நடத்தப்பட்ட ஒரு ஒத்திகையில் கீழே விழுந்து நடிகர் விக்ரம் அவர்களுக்கு விலா எழும்பில் முடிவு ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like