ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். அதில் சில நேரம் நல்ல கனவுகள் வரும். சில நேரங்களில் கெட்ட கனவுகளும் வரும். ஒரு சில கனவுகள் நம்மனதில் ஆழமாக பதிந்துவிடும்.
கனவில் நீங்கள் மீன் பிடிப்பது போல கனவு கண்டால் உங்களின் நெடுங்கால ஆசை ஒன்று விரைவில் நிறைவேறபோகிறது என்று அர்த்தம். ஆனால் அதற்கு முன்பு நம்பிக்கை இழக்க கூடிய ஒரு நிகழ்வு நடக்கப் போகின்றது. இதனை கண்டு மனம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. பொறுமையாக இருக்கவும். உங்கள் காரியம் நிச்சயமாக நிறைவேறும்.
மீன் கூடை
மீன் கூடைகளை கனவில் கண்டால், நீங்கள் எதை அடைவதற்கு விரும்புகிறீர்களோ அது கடைசியில் மிகவும் மதிப்பற்ற பொருளாக இருக்கும். இதனால் ஆரம்பத்தில் சிறிது ஏமாற்றம் அடையலாம். மதிப்பற்ற பொருள் என நினைத்து அதனை புறக்கணிக்க வேண்டாம்.
பயங்கரமான மீன்கள்
சுறா, திமிங்கலம் போன்ற பயங்கரமான மீன்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பெருஞ்செல்வம் வரப்போகிறது என்று அர்த்தம். அதன் கூடவே ஒரு ஆபத்தும் வரும். அந்த ஆபத்தை நீங்கள் துணிந்து போராடி சமாளித்து விட்டால் அந்த பெருஞ்செல்வம் உங்களுக்கு கிடைக்கும்.
வலையில் மீன் துடிப்பது போலவோ அல்லது மீன் இறந்துவிட்டது போலவோ கனவு வந்தால் நீங்கள் செய்த சில செயல்கள் மூலம் அவமானம் வந்து சேரலாம்.