வறண்ட சருமத்தை சரி செய்யும் வீட்டு தயாரிப்புகள்

காற்று அதிகமாக வீசும் காலத்தில் சருமம் வறண்டு போய்விடும். மேலும் தூசி, மண் என அனைத்தும் சருமத்தில் ஒட்டிக்கொள்ளும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சருமத்தை பொலிவாக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆலிவ் எண்ணெய், பாதம் எண்ணெய், ஆரஞ்ச் பவுடர், பசும்பால் இந்த நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து லேசான காட்டன் பஞ்சு மூலம் தொட்டு முகத்தில் பூசவும். பிறகு 20 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் சருமம் பளிச்சிடும்.

Advertisement
dry skin remedies at home

இரண்டு டேபிள்ஸ்பூன் தயிருடன் இரண்டு டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை ஒரு பஞ்சில் தொட்டு சருமத்தில் அனைத்து பகுதிகளிலும் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் பொலிவு பெரும்.

மூன்று காரட்டினை நன்கு வேகவைத்து மசித்துக்கொள்ளவும். இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை சருமத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவினால் சரும வறட்சி நீங்கும்.

தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட மோரை, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் வறண்ட சருமத்தை நீக்கி பொலிவை தரும்.

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் தக்காளி சாறை முகத்தில் தடவி உலர வைத்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். எண்ணெய் சருமம் உள்ளவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை க்ரீம் போல அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம் பொலிவடையும்.