தினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அசைவம் சாப்பிடும் அனைவருக்கும் முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. உடலுக்கு தேவையான புரோட்டீன், குறைவான கலோரி, தாது உப்புகள், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உள்ளது.

உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே அடங்கியுள்ளன.

முட்டையின் வெள்ளை கருவில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. எனவே முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் சாப்பிட வேண்டும்.

Advertisement

மூளை மற்றும் நரம்பு மண்டலம் திறம்பட செயல்பட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முட்டைகளில் உள்ளன.

முட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

தினமும் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் கண்புரை நோய், கண் நோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

முட்டைகளில் உள்ள சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மேலும் இது மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயங்குவதற்கு உதவுகிறது.

முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முட்டையில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுவதுமாக கிடைக்க நல்ல ஆரோக்கியமான முட்டைகளை வாங்கி சாப்பிட வேண்டும். இயற்கை சூழலில் வளரும் கோழி முட்டையை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடுவதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்தது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் முழுமையாக நமது உடலுக்கு கிடைக்கும்.