மூளை நன்றாக செயல்பட உதவும் இலந்தை பழம்

ஆரஞ்சு பழத்தைப்போல் சீனாவில் உருவாகிய பழம்தான் இலந்தை. கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளாக சீனாவில் பயிரப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பழத்தின் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம்.

100 கிராம் இலந்தை பழத்தில் உள்ள சத்துக்கள்

100 கிராம் இலந்தை பழத்தில் கலோரி 74 உள்ளது. 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவிகிதம் புரதமும், 77 மில்லிகிராம் வைட்டமின் சியும், மேலும் கால்சியம், கரோட்டின், பாஸ்பரஸ், நியாசின், தயாமின் போன்ற உயிர்ச்சத்துக்களும், பெக்டின் எனும் நார்சத்தும், அதிகமாக சிட்ரிக் அமிலமும், குறைந்த அளவில் மாலிக் அமிலம் இதில் அடங்கியுள்ளன. அனைத்து விதமான இலந்தை பழத்திலும் ஜெஸ்ஸிபிக் அமிலமும், டானின் என்ற பொருளும் உள்ளது. ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சத்தை விட இப்பழத்தில் அதிகமாக உள்ளது.

புண் ஆற்றும்

கை, கால்களில் புண் இருப்பவர்கள், வாய் விக்கம் இருப்பவர்கள் இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புண்கள் ஆறிவிடும். சில நேரத்தில் புண்ணில் இருந்து இரத்தம் வரும், அதனை இப்பழம் குணப்படுத்தும். வயிற்றில் உட்பகுதிகளில் புண் இருந்தாலும் இலந்தைப்பழம் குணமாக்கும். பல் ஈறுகளில் இரத்த கசிவு, உதடு, வாயில் புண் போன்றவைகள் எது இருந்தாலும் இப்பழம் குணமாக்கும்.

ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது

இப்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் வேகமாக கலந்து ரத்தத்தில் கார சத்தினை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடலிலுள்ள நோயினை விரைவாக குணமடைய செய்கிறது. மேலும் ரத்தம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

மூளை வளர்ச்சி

சுறுசுறுப்பு இல்லாதவர்கள், மந்த புத்தி உள்ளவர்கள் இந்த பழத்தினை அடிக்கடி சாப்பிட வேண்டும். இப்பழத்தினை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களது மூளை புத்துணர்வு பெற அனைவரும் சாப்பிடலாம். காரணம், மூளையைத் தூண்டும் பாஸ்பரஸ் உப்புடன் ஜியூடாமிக் என்ற அமிலமும் இலந்தைப் பழத்தில் இருப்பதால் அவை ரத்தத்தில் கலந்து மூளை நன்றாக செயல்பட உதவுகிறது.

இதற்கு ஒரு கைப்பிடி இலந்தை பழத்தை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் வைக்க வேண்டும். அது அரை லிட்டர் தண்ணீராக வற்றிய பிறகு அந்த தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி தேன் அல்லது சர்க்கரையை சேர்த்து இரவு படுப்பதற்கு முன் இந்த பானத்தை அருந்தி விட்டு படுக்க வேண்டும். இப்படி செய்வதால் இதிலுள்ள ஜியூடாமிக் என்ற அமிலம் ரத்தத்தில் நன்றாக கரைந்து மூளை சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.

காய்ச்சல் குணமாக

குளிர் காய்ச்சல், இருமலுடன் கூடிய காய்ச்சல், கடுமையான ஜலதோஷம் போன்றவைகளால் அவதிப்படுபவர்கள் மேலே குறிப்பிட்டது போல பானம் செய்து அதில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால் போதும். இரண்டு அல்லது மூன்று வேளை அருந்தினால் போதும். மூன்று பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு தரும்.

சிறுநீர் கழிக்கும் பிரச்சனை

சிலருக்கு சிறுநீர் கழிக்கச் சென்றால் உடனே வெளியேறாது. 2 அல்லது 3 நிமிடங்கள் கழித்துதான் சிறுநீர் வெளியேறும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் இலந்தை இலைகளை வேகவைத்து அதனை அடிவயிற்றில் தடவினால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி போன்றவைகள் குணமாகும்.

மூலநோய் குணமாக

மூல நோய் பலருக்கு பெரும் தொந்தரவை கொடுக்கும். அவ்வாறு உள்ளவர்கள் இலந்தை இலைகளை வேகவைத்து சூடு ஆறுவதற்கு முன் ஆசன வாயில் வைத்து கட்ட வேண்டும். இவ்வாறு தினமும் 2 அல்லது மூன்று முறை தொடர்ந்து 14 நாட்கள் செய்துவந்தால் மூலம் முற்றிலுமாக குணமடையும்.

உடல் அழகும் வலிமையும் பெற

இலந்தை பழ கொட்டையில் 73 சதவிகித மாவுப் பொருளும், புரதமும், தாது உப்புகளும் உள்ளன. இலந்தை பழ கொட்டையை நன்றாக உலர்த்தி இடித்து மாவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த பொடியினை தினமும் 2 அல்லது 3 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவும், அழகும் பெறும்.

elantha palam

பிரசவ வலி, வாந்தி

பிரசவத்தின்போது ஏற்படும் வலி, வாந்தி போன்றவற்றை குணமாக்க, மேலே குறிப்பிட்ட தூளை இரண்டு தேக்கரண்டி வாயில் போட்டு தண்ணீர் குடித்து வர குணமாகும்.

எலும்புக்கு ஆரோக்கியம்

எலும்புக்கு ஆரோக்கியம் மற்றும் வலுசேர்க்கும் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) மிக முக்கியம். எலும்பை வலுவாக்க இலந்தை பழம் அதிகம் கிடைக்கும் காலங்களில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புக்கு தேவையான கால்சியம் சத்து கிடைத்துவிடும். இதனால் எலும்பும், பற்களும் வலுவாக இருக்கும்.

செரிமானத்தை அதிகரிக்க

சிலருக்கு மிகக் குறைவாக சாப்பிட்டாலும் கூட ஜீரணம் ஆகாமல் அவதிப்படுவார்கள். அவ்வாறு உள்ளவர்கள் இலந்தை பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு, சதைப் பகுதியுடன் மிளகாய், உப்பு சேர்த்து நன்கு உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் காலையும் மாலையும் இரண்டு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கி நல்ல பசி எடுக்க உதவுகிறது.

மாதவிடாய் காலம்

பெண்களுக்கு மாதாமாதம் உருவாகும் மாதவிடாய் காலத்தில் சிலருக்கு அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். அந்த சமயத்தில் பெண்கள் மிகவும் சோர்வடைந்து விடுவார்கள். இந்த சமயத்தில் பெண்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

தூக்கமின்மையை போக்கும்

மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். சிலர் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். இவ்வாறு உள்ளவர்கள் இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். இலந்தை பழம் நரம்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்து வலுவினை தருகிறது. நரம்பு ஆரோக்கியமாக செயல்படுவதால் ரத்த ஓட்டம் சீராகி தூக்கமின்மை பிரச்சனையை போக்கும்.

இலந்தை மர இலைகளின் பயன்கள்

இலந்தை மர இலைகளை நன்றாக அரைத்து காயங்கள் மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

இலந்தை மர இலை சாறெடுத்து வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடி வளரும்.

இலந்தை மர இலையை அரைத்து புளித்த மோரில் சிறிதளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு நீங்கும்.

மேலும் அணைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.

Recent Post