Search
Search

4 ரூபாய் to 1 கோடி : ஒரு சாமானியன் விஸ்வரூபம் எடுத்த அசாத்திய தருணம் – Happy Birthday ராஜ்கிரண் சார்

ஒரு சாமானியன் மிகப் பெரிய உச்சத்தை அடையும் கதைகளெல்லாம் நாம் இதிகாசத்தில் பல கேட்டிருப்போம். ஆனால் நாம் வாழ்கின்ற இந்த சராசரி வாழ்க்கையிலும் தன் விதியை மதியால் வென்று, புகழின் உச்சத்துக்கே சென்ற பலர் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருப்பவர் இன்று பிறந்தநாள் காணும் நடிகர் ராஜ்கிரன் அவர்கள், பல ஆண்டு காலமாக ஒரு கட்டுக்கதை நிலவி வந்தது, அதுதான் ராஜ்கிரன் தான் தமிழ் சினிமாவில் முதன் முதல் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர் என்று.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தான் அது கட்டுக்கதை அல்ல, அது உண்மைதான் என்று அவரே உடைத்துக் கூறியதை நாம் அறிவோம். ராஜ்கிரண் சினிமாவிற்கு வந்த புதுசில் அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், ராசாவின் மனசிலே ஆகிய மூன்று படங்களை தானே தயாரித்து நடித்து பெரும் புகழ் பெற்றார்.

மிகப்பெரிய நடிகராக உருவெடுக்க, அதனைத் தொடர்ந்து அவருக்கு வந்த முதல் (வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிப்பில் நடிக்க) வாய்ப்பு தான் மாணிக்கம். இந்த திரைப்படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகை சுமார் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்.

இன்று ஒரு நடிகர் சர்வசாதாரணமாக 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்குவது உண்மைதான், ஆனால் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தனி நடிகர் வெறும் மூன்று படங்களில் மட்டுமே நடித்த நிலையில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது மிகவும் பெரிய விஷயம் என்பது உண்மைதான்.

ஆனால் இவையெல்லாம் எனக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை சென்னைக்கு நான் வந்த பொழுது ஆரம்பத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 4 ரூபாய் 50 பைசா தான். தினக்கூலியாகத்தான் இருந்தேன், என் உழைப்பையும் நேர்மையும் கண்டு எனக்கு வேலை கொடுத்த அந்த நிறுவனத்தினர் எனக்கு பதிவு உயர்வு கொடுத்தனர். 4 ரூபாய் இருந்த என் சம்பளம் 150 ரூபாயாக மாறியது ஆகையால் ஒரு கோடி சம்பளம் வாங்கியது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்று சிரித்துக் கொண்டே கூறினார் ராஜ்கிரண்.

வடிவேலு போன்ற மிகச் சிறந்த சினிமா ஆளுமைகளை வெளிப்படுத்திய மிகப்பெரிய பெருமையும் ராஜ்கிரன் அவர்களையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. Happy Birthday ராஜ்கிரண் சார்.

You May Also Like