தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்? எதை தவிர்க்கலாம்?

உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்றவை தைராய்டு நோய்க்கு முக்கிய காரணமாகின்றன. நமது உடலில் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாவிட்டால் பல பிரச்சினைகளை உருவாக்கும். தைராய்டு பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம்.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது,போன்றவை தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அறிகுறிகள்

தைராய்டு சுரப்பு அதிகமானால் உடல் எடை குறையும். உடல் சோர்வாக இருக்கும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் உடல் எடை அதிகரிக்கும். இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம் உருவாகும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்

ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் வைட்டமின் பி உள்ளது. இவற்றை உணவில் சேர்ப்பதால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்க உதவும். மேலும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்.

முட்டை தைராய்டு சுரப்பிக்கும் மிகவும் தேவையான ஒன்று. ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது.

தயிரிலிருந்து தயாரிக்கப்படும் குறைந்த கொழுப்புள்ள தயிரில் (Yogurt) அயோடின் சத்து நிறைந்துள்ளது. எனவே தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக்கொள்ளலாம்.

தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, இந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

சல்பர் அதிகம் உள்ள சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்படுவதால் இது அயோடின் அளவையும் குறைத்துவிடும்.

Recent Post