பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 4 இளைஞர்கள் கைது

டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சிக்கமக்களூருவில் உள்ள காபி தோட்டத்தில் பணிபுரியும் நான்கு இளைஞர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடியுள்ளனர். மேலும் பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மீது காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் எனவும் அசாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த நான்கு பேரும் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது.