Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

பழச்சாறுகளும் அதன் நன்மைகளும்

மருத்துவ குறிப்புகள்

பழச்சாறுகளும் அதன் நன்மைகளும்

அத்திப்பழச்சாறு

‘‘அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை’’ என்று பழமொழி இருந்தாலும்கூட அத்திப்பழத்தை மருந்தாக உபயோகிகலாம்.

அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்

  • இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரவல்லது.
  • நாட்பட்டு மெதுவாக ஆறிக்கொண்டிருக்கும் ரணங்களை ஆற்றும் வல்லமை பெற்றது.
  • அத்திப்பழமும் தேனும் கல்உப்பும் சேர்த்து உண்ண ஆரம்ப காய்ச்சிதைவுகளை சரிசெய்யலாம்.
  • ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் சரியாகும்.

ஆரஞ்சுச் சாறு

தொண்டையில் புற்றுநோய் கண்டு எந்த உணவும் உண்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும்.

திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.

  • இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது.
  • எளிதில் சீரணம் செய்ய தகுந்தது.
  • இருத நோய்கள் எளிதில் குணமாகும். நீரிழிவு நோயும் கட்டுப்படும்.
  • டைபாய்டு, ஷயரோகம் ஆகியவை குணமடையும்.
  • ஆரஞ்சுச்சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
  • சிறுநீரக குறைபாடுகள் குணமாகும்.
  • குழந்தைகளுக்கு கொடுக்க குடல்பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம்.

ஆப்பிள்பழச் சாறு

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல் உடல்களைப்பு, வேலையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது.

ஆப்பிள் சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ் ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்தசோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை மீண்டும் பெறலாம்.

குழந்தைகளுக்கு ஆப்பிள்சாறு கொடுக்க உடல் வளர்ச்சி மீண்டும் பெருகும்.

எலுமிச்சைச்சாறு

பாத்திரங்களை படிந்துள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் இது பயன்படுகிறது. எலுமிச்சம் பழத்தை சாறுபிழிந்து அத்துடன் தேன் அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்துக்கு 1/2 லிட்டர் அளவு தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.

தொடர்ந்து இதை அருந்துவதால் மூலநோய்கள், வயிற்றுக் கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடுகிறது.

  • இளநீருடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்த டையாய்டு நோய் குணமாகும்.
  • வெள்ளை வெங்காய சாறுடன் சேர்த்து அருந்த மலேரியா நோய் குணமாகும்.
  • வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து எலுமிச்சைச் சாறுடன் அருந்த காலரா குணமாகும்.
  • உடல் களைப்புகள் கைகால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக் கெண்ணை கலந்து நன்கு தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.
  • பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்களை வராது தடுக்கலாம்.

தக்காளிச்சாறு

தக்காளிச்சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும்.

  • நீரிழிவு வியாதியும் கட்டுப்படும்.
  • சாறுடன் தேன் கலந்து அருந்தி வர ரத்தம் சுத்தமாகும், தோல் நோய்கள் குணமாகும்.

தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படுவடுவதற்கேற்ப நோய்களையும் குணமாக்கும் இயல்புடன் ஆப்பிளில் இருக்கும் சத்தை விட சற்று அதிகமான சத்துடன் விலை மலிவாகவும் கிடைக்கும்.

தர்பூசனிப்பழச்சாறு

கோடையின் கொடுமையிலிருந்து தப்ப விரும்புவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் இதனை சாறு எடுத்து அருந்தும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும்போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.

  • நீரிழிவு கட்டுப்படும்.
  • சாறுடன் தேன் கலந்து அருந்த காய்ச்சல் குணமாகும்.
  • சாறுடன் சம அளவு மோர் கலந்து அருந்த காமாலை நோய் குணமாகும்.

திராட்சைச்சாறு

திராட்சைசாறு தொடர்ந்து அருந்த இரத்த அழுத்த குறைவு, நரம்புதளர்ச்சி, குடல்புண் (அல்சர்), காமாலை, வாயு கோளாறுகள் மூட்டுவலி ஆகியவை குணமாகும்.

  • சாறுடன் தேன் கலந்து அருந்த ரத்த விருத்தியுண்டாகி உடல்பலம்மிகும்.
  • நீரிழிவு நோய்க்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
  • வெள்ளை திராட்சை சாறு தொடர்ந்து அருந்த வாதம், க்ஷயம் ஆகிய நோய்கள் வராது.

மாம்பழச்சாறு

மாம்பழச்சாறு மனம் விரும்பும் சுவையுடைய தாயிருக்கும். இச்சாறுடன் தேங்காய்பாலும் தேனும் கலந்து அருந்த நினைவாற்றல் பெருகுவதுடன் உடல் பலமும் உயரும்.

  • மாம்பழச் சாறுடன் காரட் சாறு கலந்து அருந்த மூத்திரக் குறைபாடுகள் குணமாகும்.
  • மாம்பழச்சாறு தோல் வியாதிகளை தடுக்கும்.
  • முகப்பருக்களை விரட்டும்.
  • மேனி பளபளப்பாகும்.
  • அஜீரணக்கோளாறுகள் சரியாகும்.
  • அதிக இரத்த அழுத்தம் சரியாகும்.
  • கண்கள் நல்ல ஆரோக்கியம் பெறும்.

மாதுளைச்சாறு

மாதுளம் பழம் மிகவும் ருசியானது இச்சாறு அருந்த குடல் நோய்கள் குணமாகும்.

  • சிறுநீரக குறைபாடுகள் நீங்கும்
  • இருதயம் பலப்படும்
  • க்ஷயரோகம் தீரும்
  • காமாலைக்கு தடுப்பாக அமையும்
  • கண்பார்வை சரியாகும்.

பப்பாளிப்பழச்சாறு

  • உண்பதற்கு சுவையான இப்பழத்தின் சாறு உடலுக்கு உறுதி தரக்கூடியது
  • அஜீரணக் குறைபாடுகள் நீங்கும்
  • வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். எனவே கர்ப்ப அணுக் களையும் அழித்து விடும் என்பதால் கர்ப்பிணிகள் இதை உட்கொள்ளக் கூடாது மூன்று மாதங்களுக்கு மேல் உண்ணலாம்.
  • நரம்பு தளர்ச்சி நீங்கும்.
  • பலம் பெருகும்.
  • நினைவாற்றல் மிகும்.

பைன்ஆப்பிள் சாறு

இச்சாற்றை மிளகுதூள் சேர்த்து தினசரி அருந்த உடற் சோர்வு நீங்கும்.

  • மூலநோய் குணமாகும்.
  • தோல் நோய்கள் குணமாகும்
  • சளித்தொல்லை குறையும்.
  • தொண்டை வியாதிகள் வராது.
  • யானைக்கால் நோய்க்கு கைகண்ட மருந்து.
  • காக்கை வலிப்பு கட்டுப்படும்.
  • சொறி, சிரங்கு சரியாகும்.
  • மஞ்சள்காமாலை விரட்ட துணையாகும்.
  • கல்லீரல் வீக்கம் சரியாகும்.-
  • சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
  • மலச்சிக்கள் அறவே நீங்கும்.

வாழைப்பழச்சாறு

முக்கனிகளில் இது ஒன்று விலை மலிவாக கிடைப்பது அனைவரும் விரும்பி உண்ணத்தக்கது. ஆண்டு முழுவதும் கிடைக்கும்.

  • க்ஷய ரோகம் கண்டவர்கள் தேனுடன் வாழைப்பழம் சேர்த்து உண்ணலாம்.
  • உடலின் மேற்புறம் தோன்றும் இரத்த சிலந்திகளுக்கு வாழைப் பழத்தை குழைத்து போட அவை பழுத்து உடையும்.

பலாப்பழச்சாறு

முக்கனிகளில் இதுவும் இன்றியமையாதது. மனம் விரும்பி உண்ணும் மணம் கொண்டவை இச்சாற்றை அதிகம் உண்டால் வயிற்று வலி உண்டாகும். அசீரணம் உண்டாகும்.

  • பழச்சாறுடன் தேன் கலந்து அருந்த சீரணம் சீராகும்.
  • அல்சர் தொல்லைகள் குணமாகும்.

காரட் சாறு

ஒரு கிலோ காரட்டின் சாறு 20 கிலோ கால்சியம் மாத்திரைகளுக்கு சமம். காரட் சாறு தொடர்ந்து அருந்த உடலில் உள்ள பாக்டீரியா வெளியேறும். இச்சாற்றை பிறஇலை கனிச்சாறுகளுடன் கலந்தும் அருந்தலாம்.

  • உடல் பொன்போல மிளிரும்
  • வயிற்றுப்புண் ஆறும்
  • வாய் துர்நாற்றம் நீங்கும்
  • கண்பார்வை மிகுதியாகும்
  • தொண்டைபுண்கள் குணமாகும்
  • ஆஸ்துமா நோய் அகலும்

இஞ்சிச்சாறு

இஞ்சியை நன்றாக அரைத்து சாறு எடுத்து அதை சற்று நேரம் வைத்தால் சாற்றின் அடியில் களிம்பு போன்ற கசடுகள் தங்கும் அவை உடலுக்கு தீமை பயப்பன எனவே அதை தவிர்த்து விட்டு வெறும் இஞ்சிச்சாற்றை அருந்தலாம். தேன் கலந்து அருந்துவது நலம் பயக்கும்.

  • செரிமான சக்தி அதிகமாகும்
  • மஞ்சள் காமாலை கட்டுப்படும்
  • மார்வலி குறையும்
  • ஆஸ்துமா அகலும்

இஞ்சிச்சாறு 1/2 தேக்கரண்டியுடன் தேன் கலந்து புதினா கீரை சாறு மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினசரி 3 வேளை அருந்த பித்த வாந்தி சரியாகும்

  • தலைச்சுற்றல் மயக்கம் ஆகியவை தீரும்
  • மூல நோய் குணமாகும்
  • செரிமானம் மிகும்
  • இஞ்சிச்சாறுடன் கிராம்பு உப்பு சேர்த்து அருந்த தொண்டை நோய்கள் குணமாகும்.
  • கரகரப்பு நீங்கும்
  • சுவாச உறுப்புகளில் அழற்சி நீங்கும் இஞ்சிச்சாறுடன் இளநீர் கலந்து அருந்த மூத்திர குறைபாடுகள் குணமாகும்
  • வயிற்றில் தேவையில்லாத நீர் சுரப்பு நிற்கும்
  • உடலில் உள்ள துர்நீர் வெளியேறும்
  • இஞ்சிச்சாறுடன் மணத்தக்காளி சாறு கலந்து அருந்த மஞ்சள் காமாலை மாறும்
  • வயிற்றுப் போக்கு சரியாகும்
  • வயிற்று கடுப்பு குணமாகும்.
Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top