கெட் ரெடி.. விரைவில் வெளியாகும் அஜித் குமார் 62 அப்டேட் – காத்திருக்கும் ரசிகர்கள்

மகிழ் திருமேனி, அஜித் குமாரின் 62வது படத்தை இயக்கவிருக்கும் ஒரு சிறந்த இயக்குநர். முதலில் லைகா நிறுவனம் இந்த வாய்ப்பை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில பல காரணங்களால் இறுதியில் அவர் நீக்கப்பட்டார்.
அதன் பிறகு தடம் உள்ளிட்ட ஐந்து சிறந்த படங்களை இயக்கி வெற்றியை தந்த மகிழ் திருமேனியிடம் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் திருமேனியும் சொன்ன தேதியை விட அதிக நாட்களை எடுத்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே அவ்வப்போது விரைவில் AK62 படத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று அவ்வப்போது கூறி வருகின்றார். இந்நிலையில் அஜித் குமார் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படுவது போன்ற ஒரு காணொளியை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் கெட் ரெடி என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார், ஆகவே விரைவில் இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் மிக மிக ஆர்வத்துடன் ஆவலோடு காத்திருக்கின்றனர்.