கோல்டு திரை விமர்சனம்

பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் கோல்டு. நேரம், பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பிருத்விராஜ் புதிய கார் ஒன்றை ஆர்டர் செய்கிறார். அந்த கார் டெலிவரிக்கு வருவதற்கு முன்பே யாரோ ஒருவர் அவர் வீட்டு வாசலில் பொலேரோ வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுவிடுகின்றனர். பிறகு காவல் நிலையத்திற்கு சென்று புகாரளிக்கிறார்.
இதனிடையே அந்த காரில் இருந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை எடுத்து பயன்படுத்துகிறார். அப்போது எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. அதை பிருத்விராஜ் எப்படி கையாள்கிறார்? அந்த வண்டியை அங்கே நிறுத்தியது யார்? என்பதுதான் படத்தின் கதை.

பிரித்விராஜ். பதற்றம், பயத்துடன் கூடிய உடல்மொழியை சுமந்து சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
நயன்தாராவின் கதாபாத்திரத்தை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. மொத்தமே நான்கு காட்சிகள் மட்டுமே வருகிறார்.
காமெடிக்காக வழிந்து திணிக்கப்பட்ட லாலு அலெக்ஸ், அஜ்மல் ஆகியோரின் செயற்கைத்தனமான காமெடிகள் எங்குமே ஈர்க்கவில்லை.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, விஎஃப்எக்ஸ், பின்னணி இசை எனஅனைத்தும் நன்றாக உள்ளது. அல்போன்ஸ் புத்திரனின் ‘மேஜிக்’ ஆங்காங்கே இருந்தாலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.