கொரோனாவுக்கு பிறகு வேலைக்கு போறீங்களா? இதோ உங்களுக்காக அரசு சொன்ன டிப்ஸ்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனை தவிர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், வேலைக்கு செல்லும் இடத்தில் இருந்து வைரஸ் பரவி விடாமல் இருக்க மத்திய சுகாதாரத்துறை சில கட்டுப்பாடுகளையும் மற்றும் சில அறிவுரைகளையும் மக்களுக்காக வழங்கியுள்ளது.
பொதுவாக உடம்பில் வேறு ஏதேனும் நோய் இருப்பவர்களும், 65 வயதுக்கு மேல் இருப்பவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் வெளியே வராமல் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணி பெண்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் மருத்துவர்களை தொடர்புகொண்டு அதற்கு ஏற்றாற்போல் வெளியே வரலாம்.
வேலைக்கு செல்லும் முன்பு, முடிந்தவரை நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதாவது, முகத்தில் மாஸ்க், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த சானிடைசர், தங்களுக்கென்று தனியாக தண்ணீர் பாட்டில், பிறருடன் உணவினை பகிர்ந்து கொள்வதை சில நாட்களுக்கு தவிர்ப்பது நல்லது, முக்கியமாக குறைந்தது 6 அடி இடைவெளி விட்டு பணியாற்ற வேண்டும்.
நிறுவனங்கள் தங்கள் பணியாட்களை சோதனைக்குப் பிறகு அலுவலகத்தில் அனுமதிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியாட்களை அலுவலக வளாகத்துக்குள் அனுமதிப்பதை தவிர்க்கவேண்டும். என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும், நம்மையும் மீறி ஒருசிலருக்கு வைரஸ் பாதிப்பு உண்டாக வாய்ப்புண்டு. அவ்வாறு யாருக்காவது அறிகுறி தென்பட்டால் மருத்துவ சோதனை கட்டாயம் எடுக்க வேண்டும்.
ஒருவேளை அந்த நபருக்கு வைரஸ் தொற்று உறுதியானால் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் பிறகு அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் அவர் பணிபுரிந்த இடத்தினை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, சில அறிவுரைகளை அரசு வலியுறுத்தியுள்ளது.
Indian government issues guidelines to prevent spread of COVID-19 at workplaces