Search
Search

செல்போன் மூலம் பாலியல் துன்புறுத்தல் – அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 10 பெண்களில் 8 பேர் செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையற்ற நபர்களின் அழைப்புகள், குறுஞ்செய்திகள் தங்களுக்கு தொந்தரவாகவும், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகிறார்கள்.

சம்பந்தமில்லாத நபர்களின் அழைப்பு பாலியல் ரீதியாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கென்யா, கொலம்பியா, பிரேசில் மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலும் இது நடக்கிறது. இந்தியாவில் குறிப்பாக சென்னை, புதுடெல்லி, புனே, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் ரீசார்ஜ் செய்யும் கடைகள், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் பெண்கள் தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்கிறார்கள். இதன் மூலமாக பெண்கள் தேவையற்ற அழைப்புகளை எதிர்கொள்கிறார்கள்.

இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே தைரியமாக புகார் தெரிவித்து குற்றவாளி களுக்கு தண்டனை வாங்கித்தர முயற்சி செய்கிறார்கள். 85 சதவீதம் பெண்கள் பேர் புகார் அளிக்க முன்வருவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You May Also Like