Search
Search

நெஞ்செரிச்சல் ஏன் வருகிறது? அதை எப்படி சரி செய்வது?

acidity home remedies in tamil

நெஞ்செரிச்சல் என்பது பலருக்கு இருக்கின்ற பொதுவான பிரச்சினை தான். நாம் சாப்பிடும் உணவு தான் நெஞ்செரிச்சலை உருவாக்குகிறது. இரவு நேரங்களில் நெஞ்செரிச்சல் அதிகமாக வருவதால் சிலரால் நிம்மதியாக தூங்க முடியாது. மோசமான உணவுப் பழக்கமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

acidity home remedies in tamil

அதிகக் கார உணவு, துரித உணவு, காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, இரவில் தாமதமாக உறங்குவது போன்ற காரணங்களால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

நெஞ்செரிச்சலால் நீங்கள் மிகவும் அவதிப்படுகின்றீர்கள் என்றால் வீட்டில் இருக்கும் சில மூலிகைகளை வைத்தே நெஞ்செரிச்சலை சரி செய்யலாம்.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வயிற்று அமில உற்பத்தியை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுவதால் செரிமானத்தை விரைவுபடுத்துகிறது.

நட்சத்திர சோம்புவை எடுத்து வெறும் வாயில் போட்டு மெல்லுங்கள். இது அசிடிட்டி அறிகுறிகளை குறைக்கும். நட்சத்திர சோம்புவை தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வர அசிடிட்டி பிரச்சினை நீங்கி விடும்.

2 ஏலக்காயை நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்தால் நெஞ்செரிச்சல் உடனடியாக குணமாகும்.

துளசி அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும். 6 துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சலுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

1 கப் தண்ணீரில் சிறிது புதினா இலைகளை நறுக்கி போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

செரிமான பிரச்சினை தீர்ப்பதில் இந்த சீரகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. ஒரு டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

சிறிது இஞ்சியை சூடு நீரில் நசுக்கி போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகி விடும். நெஞ்செரிச்சல் இருக்கும் நேரத்தில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தலாம்.

அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது. உடல் எடையைப் பராமரியுங்கள்.

Leave a Reply

You May Also Like