4 நாட்களுக்கு கனமழை.. பேரிடர் மீட்பு படையினர் தயார்.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 1149 பேர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு பணியாளர் 899 பேர் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 16 கால்நடைகள் இறந்து போனது. 52 குடிசை வீடுகள் சேதம் அடைந்தன. உயிரிழப்புக்கு நிவாரண தொகை 4 லட்சம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற 536 நீர் இரைப்பாண்கள் தயார் நிலையில் உள்ளது.