“இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம்”.. புதிய சாதனை படைத்த பொன்னியின் செல்வன் 2!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கி பலர் முயன்று எடுக்க முடியாமல் போன ஒரு திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். பிரபல எழுத்தாளர் கல்கி அவர்களின் கற்பனையின் உதித்த ஒரு வரலாற்று புனைவு கதை இது.
சோழர்களின் வீர வரலாற்று நிகழ்வுகளை கொண்ட இந்த படத்தை தற்போதைய முன்னணி நடிகர்களை கொண்டு சிறப்பாக எடுத்து முடித்து வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்தினம். சென்ற ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
வெளிநாடுகளில் பல திரையரங்குகள், 4Dயில் வெளியான முதல் தென்னிந்திய திரைப்படம் மற்றும் 300 கோடி வசூல் என்று பல சாதனைகளை தொடர்ந்து படைத்தது வருகின்றது பொன்னியின் செல்வன் 2. தற்பொழுது மற்றொரு சாதனையையும் இந்த திரைப்படம் பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த 2023ம் ஆண்டில், அதிக வசூலை பெற்ற படம் (இன்றைய தேதிவரை) என்ற சாதனையை பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.