வௌவால் (வவ்வால்) வாழ்க்கை வரலாறு
பொதுவாக பகல் பொழுதில் மேல் சுவற்றில் தலைகீழாகத் தொங்கும் வௌவாலையும், இரவில் பொந்துனுள் தலையை நீட்டும் வௌவாலையும், அந்திப் பொழுதில் வேகமாக இறக்கைகளை அடித்துப் பறக்கும் வவ்வாலையும் எல்லோரும் பார்த்திருப்போம், அதற்கு மேல் வவ்வாலைப்பற்றி அறிந்து இருப்போர் மிகவும் குறைவு. இப்போது நாம் வௌவாலைப்பற்றி சில தகவல்களை பார்ப்போம்.
வவ்வால் தோன்றி சுமார் 5.3 கோடி ஆண்டுகள் ஆகின்றன!
மரங்களில் வசித்த பறவைகளிலிருந்து வவ்வால் தோன்றிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.
வவ்வால் பறவைப்போல் பறந்தாலும் பிராணி இனத்தைச் சேர்ந்ததுதான். காரணம், பெண் வௌவால் குட்டிகளை ஈன்று பாலூட்டுகிறது.

வவ்வாலின் உடல் முழுவதும் ரோமத்தால் அடைந்திருக்கும். இதற்கு பறப்பதற்கு தனியாக இறக்கைகள் இல்லாவிட்டாலும் அது அதன் விசித்திரமான தனது கைகள் அமைப்பினை கொண்டு பறக்கிறது.
பிராணிகளைப் போலவே கால்களை ஆதராமாகக் கொண்டு வவ்வால் நிற்க முடியாது, அதனால் உள்ளங்கால்களின் உட்பக்க மடிப்புகளின் உதவியைக் கொண்டு மேற்சுவற்றில் தலைகீழாகத் தொங்குகிறது.
வவ்வாலில் சுமார் 1000 வகைகள் உள்ளதாகவும், அதில் 100 வகைகள் இந்தியாவில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
இரைத்தேடப் புறப்படும வவ்வால் மனிதர்கள் கேட்க முடியாத அளவுக்கு மிக மெல்லிய ஓசையை எழுப்புகிறது. இந்த ஓசையால் பீதியடையும் கொசுக்கள், மிகச்சிறிய வண்டுகள், பூச்சிகள் அனைத்தும் இருட்டில் பறக்க தொடங்குகின்றன.
அவைகள் பறக்கும் மிக மெல்லிய ஓசையை வவ்வாலின் தனிதன்மை வாய்ந்த செவித்திறமையால் கண்டறிந்து மேலும் தனது சிறப்பான நுகரும் சக்தியின் மூலம் வெகு எளிதில் இரையை பிடித்துவிடுகிறது.
வவ்வால் மட்டும் இந்த மிக சிறிய பூச்சிகளை உட்கொள்ளாமல் இருந்தால் அவைகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விடும் என கூறுகிறார்கள் நிபுணர்கள்.
சில வவ்வால் இனங்கள் பழங்களைத் தின்று வாழும்.
சிலவைகள், கரப்பான் பூச்சி, தேள், பல்லி, சுண்டெலி, சிட்டுக் குருவி போன்றவற்றின் இரத்ததை உறிஞ்சிக் குடித்து வாழ்கிறது.
வடஇந்தியாவில் உள்ள வவ்வால் கடும் குளிர் காலங்களில் உணவுப் பற்றாக்குறையின் காரணமாக இடப் பெயர்ச்சி செய்து கொள்ளும்.