சென்னை, தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் தனிச் சிறப்பைக் கொண்ட கிண்டி பொறியியல் கல்லூரி (College of Engineering, Guindy – CEG) என்பது இந்தியாவிலேயே முதன்முதலில் உருவான பொறியியல் கல்வி நிறுவனம் என்பது பெருமைக்குரிய தகவல். இந்தக் கல்லூரி 1794ஆம் ஆண்டு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் எட்டு மாணவர்களுடன் ஒரு சர்வே பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. இன்று இது ஆசியாவின் மிகவும் பழமையான தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் என்ற அடையாளத்தை பெற்றுள்ளது.
வரலாற்றுப் பின்னணி:
- மைக்கேல் டாப்பிங் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 1858ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் பள்ளியாக மாற்றப்பட்டது.
- 1859ஆம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் அதிகாரப்பூர்வமான கல்லூரியாக அங்கீகரிக்கப்பட்டது.
- 1861இல் இயந்திர பொறியியல் பிரிவின் தொடக்கத்துடன் இது முழுமையான பொறியியல் கல்லூரியாக உருவெடுத்தது.
வளர்ச்சியின் முக்கிய கட்டங்கள்:
- 1920இல் தற்போதைய 185 ஏக்கர் கொண்ட கிண்டி வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
- 1925இல் ராவ் பகதூர் ஜி. நாகரத்தினம் ஐயர் முதல் இந்திய முதல்வராக பொறுப்பேற்றார்.
- 1935இல் ஆராய்ச்சி திட்டங்கள் அறிமுகமானது; டாக்டர் கே.எல். ராவ் முதுகலை பட்டம் பெற்றார்.
- 1940இல் லீலா ஜார்ஜ் மற்றும் ஏ. லலிதா ஆகியோர் முதல் பெண் பொறியாளர்களாக கிண்டியில் பட்டம் பெற்றனர்.
- இரண்டாம் உலகப்போரின் போது (1942-43), கல்வி முடிக்க சிறப்பு திட்டம் அறிமுகமானது.
- 1946இல் பேராசிரியர் கே. சுகுமாரன் முதல்முனைவர் பட்டம் பெற்றவர் ஆனார்.
- 1957இல் மாணவர் சேர்க்கை 175 இலிருந்து 275 ஆக உயர்ந்தது.
- 1978இல் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் – உறுப்புக் கல்லூரிகள்:
- CEG – கிண்டி பொறியியல் கல்லூரி (Guindy, Chennai)
- MIT – மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Chrompet)
- ACT – அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி
- SAP – கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி
MIT குரோம்பேட்டையில் செயல்படுவதால் முந்தைய மூன்று உறுப்புக் கல்லூரிகள் கிண்டி வளாகத்திலேயே செயல்படுகின்றன.
NIRF 2024 தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சாதனை:
தரவரிசை பிரிவு | இடம் |
---|---|
பொது பல்கலைக்கழகம் | 1வது இடம் |
புதுமை தரவரிசை | 10வது இடம் |
பல்கலைக்கழக தரவரிசை | 13வது இடம் |
பொறியியல் தரவரிசை | 14வது இடம் |
ஆராய்ச்சி தரவரிசை | 17வது இடம் |
ஒட்டுமொத்த தரவரிசை | 20வது இடம் |
கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் | 34வது இடம் |
முடிவுரை:
தொழில்நுட்பக் கல்வியில் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட அண்ணா பல்கலைக்கழகம் இன்று இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் உயரிய இடத்தை பிடித்துள்ளது. பழமை, நவீனம், தரம், ஆராய்ச்சி அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் இந்த கல்விக் கோபுரம், பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.