முன்னரை:-
அலுவலகத்தில் பணிபுரியும்போது பெறாமைக் குணம் கொண்டவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம் வாங்க.
விளக்கம்:-
அலுவலகத்தில் பணிபுரியும் போது, அனைவரும் ஒரே மாதிரியான நபர்களாக இருக்க மாட்டார்கள்.
ஒரு சிலர் கோவமானவர்களாகவும், ஒரு சிலர் சோம்பேறிகளாகவும், ஒரு சிலர் நல்ல குணம் கொண்டவர்களாகவும், ஒரு சிலர் பெறாமைக் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அதில், நாம் பெறாமைக் குணம் கொண்டவர்களிடம் இருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.
அவர்களிடம் இருந்து தப்பிப்பது என்பது சில பற்றி சில டிப்ஸ்கள் பின்வருமாறு:-
1. உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள்
அலுவலகத்தில் நீங்கள் நல்ல திறமைசாலிகளியாக இருக்கும்போது, தலைமை உங்களை பாராட்டுகளை தர வாய்ப்பிருக்கிறது.
அதுபோன்ற நேரங்களில், முதலில் வயிறு எரிபவர்கள் பொறமைக்குணம் கொண்டவர்கள் தான். அவர்களை பற்றி மண்டையில் ஏத்திக்கொள்ளாமல், உங்கள் வேலையில் கவனமாக இருங்கள்.
2. அவர்களை கண்டுகொள்ளாதீர்கள்
அவர்கள் உங்களை எப்படியாவது கீழே தள்ளவிடுவதற்கு குறியாக இருப்பார்கள். தேவையில்லாமல் உங்களிடம் பேசி வேலையை கெடுக்க நினைப்பார்கள்.
எப்படியாவது உங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி முயற்சிப்பார்கள். அவர்களின் செயல்களை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுங்கள்
3. தெளிவு வேண்டும்
பொறமைக்குணம் கொண்டவர்களிடம் இருந்து தப்பிக்க தெளிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவர்கள் நீங்கள் செய்யும் எந்தவொரு தவறையும் தலைமையிடம் சுட்டிக்காட்ட நினைப்பார்கள்.
எனவே, வேலையில் முழு கவனத்துடன் இருங்கள். உங்களது அத்தனை வேலைகளையும் பதிவு செய்துக்கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு தவறுகள் செய்யாமல் இருக்க பழகிக்கொள்ளுங்கள்.
4. உதவி
நாம் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் சில சமயங்களில் தவறு நேர்வது சாதாரண விஷயம் தான். ஆனால், பொறமைக்குணம் கொண்டவர்கள் அதனை ஊதி பெரியதாக்க முயற்சி செய்வார்கள்.
அப்போது நமக்கு உதவி சில நல்ல நண்பர்களின் உதவி, அலுவலகத்தில் தேவைப்படும். எனவே முடிந்த அளவிற்கு நல்ல நண்பர்களை அலுவலகத்தில் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக்கொள்ளுங்கள்.