சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வைகை ஆற்றங்கரையில் உள்ளது இடைக்காட்டூர்.
இரண்டாம் நூற்றாண்டில் 18 சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் தங்கி வாழ்ந்துள்ளார். பூலோகம் கடும் பஞ்சத்தில் இருக்கும்போது, நவ கிரகங்களான சூரியன், ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் பலமாக உள்ள இடைக்காடர் சித்தர் தங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்து உள்ளனர்.
வந்தவர்கள் நவக்கிரகங்கள் என அறிந்த இடைக்காடர், உபசரித்து தினைமாவு உணவு வழங்கினார். பின்னர் ஓய்வு எடுத்த நவக்கிரகங்கள் அனைவரும் ஒரே திசையில் இருந்தால் எப்போதும் பஞ்சம் நிலவும் என இடைக்காடர் சித்தர் நவக்கிரகங்களை திசைதிருப்பி வைத்தார்.
அதை தொடர்ந்து பூலோகத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சமும், வளமும் மாறி மாறி வருவதாக கூறப்படுகிறது. இன்றைக்கும் இடைக்காடர் சித்தர் எழுதிய பஞ்சாங்கம் நாடு முழுவதும் பார்க்கப்படுகிறது.
பல்வேறு தோஷ நிவர்த்தி தலமாக இடைக்காடர் சித்தர் கோவில் உள்ளது. இங்கு இடைக்காடருக்கு ஐம்பொன் சிலை. இது தவிர விநாயகர், முருகன், நவக்கிரகங்கள் சன்னதியும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இடைக்காடர் ஜெயந்தி விழாவும், குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி விழா நடக்கிறது.

பௌர்ணமி அன்று விசேஷ பூஜை வழிபாடு நடைபெறுகிறது. அனைத்து தோஷம் நீங்க இடைக்காடர் சித்தர் நவகிரக கோவில் உள்ளது.
இருப்பிடம் : மதுரை ராமேஸ்வரம் சாலையில் 35 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.