இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுகள்

பொதுவாக இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். இரும்புச்சத்து இருந்தால் தான், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருக்கும்.

இரும்பு சத்து குறைவாக உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்

நீண்ட நாட்களாக சோர்வு, சுவாசிப்பதில் சிரமம், சருமம் ரத்தமின்றி வெளிறி காணப்படுவது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் இரும்பு சத்து குறைவாக உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்.

உடல் எந்த நேரமும் சோர்வாகவே இருப்பது இரும்புச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று.

இரும்பு சத்து குறைவால் கண், நாக்குப் பகுதிகளில் ரத்த ஓட்டம் குறையும். இதனால் அவை வெளுப்புடன் இருக்கும். ஈறுகள், உதடுகள், கீழ் கண் இமைகள் மற்றும் நகங்கள் நிறமற்றதாக காட்சியளிக்கும்.

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது வாக்கிங் அல்லது வேறு எந்த சிறிய வேலையும் செய்யும் போது கூட மூச்சுதிணறல் ஏற்படுகிறது.

இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுகள்

பசலைக்கீரை

உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. பசலைக்கீரையை சூப், பொரியல், அவியல், பச்சடி என்றும் தயாரித்து சாப்பிடலாம். மேலும் இது புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. அதில் சிறப்பான மருத்துவக்குணங்கள் உள்ளது. உருளைக்கிழங்கு மிக விரைவாக செரிமானமாகும்.

பேரிச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கும்.

உலர் திராட்சை

100 கிராம் உலர் திராட்சையில் 10 சதவீதம் இரும்பு சத்து உள்ளது. தினமும் சிறிதளவு உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். மேலும் உங்கள் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும்.

ஆப்ரிகாட் பழம்

ஆப்ரிக்காட் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உடனடியாக கலந்து ரத்த விருத்தியை உண்டாக்கும். இதனால் ரத்த சோகை நோய் குணமாகும்.

முருங்கை கீரை

முருங்கை கீரையை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது. இது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை அளிக்கிறது. அடிக்கடி முருங்கை கீரை எடுத்துக்கொண்டால் தலைமுடி உதிர்வையும், முடி நரைப்பதையும் இது தடுக்கும்.

Recent Post