Search
Search

கலகத் தலைவன் திரை விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கலகத் தலைவன். மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கார்ப்ரேட் நிறுவனம் ஒன்று குறைவான பெட்ரோலில் மைலேஜ் அதிகமாக தரும் வாகனத்தை கண்டுபிடிக்கிறது. அதனை சந்தைக்கு அறிமுகமாகும் முன் அந்த வாகனத்தின் மூலம் காற்று மாசுபாடு அதிகம் உருவாகும் என்பது தெரிய வருகிறது.

அரசின் அனுமதி கிடைப்பது கடினம் என்பதால், அதை மறைக்க அந்நிறுவனத்தின் அதிபர் முயற்சி செய்கிறார். ஆனால் அந்த ரகசியம் வெளியே தெரிந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டு பல கோடிக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த விஷயத்தை கசிய வைத்தது யார்? கார்ப்பரேட்டுகளுக்கு தண்ணி காட்டும் சிங்கிள் மேன் உதயநிதி யார்..? அவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார்? என்பதே படத்தின் கதை.

kalaga thalaivan movie

நாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்தையும் செய்துள்ளார். படம் நெடுகிலும் ஹீரோவைவிட பவர்ஃபுல் வில்லனாக ‘பிக் பாஸ் புகழ்’ ஆரவ், மிரட்டி எடுத்திருக்கிறார்.

கலையரசன் முக்கியமான ரோலில் நன்கு நடித்திருக்கிறார். கதாநாயகி நிதி அகர்வால் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.

ஸ்ரீகாந்தின் எடிட்டிங் ஓகே. ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை சேர்க்கிறது.

மொத்தத்தில் ‘கலகத் தலைவன்’ கார்ப்பரேட் அத்துமீறலையும் அதற்குத் துணை நிற்கும் அரசாங்கத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஓர் அப்பாவிக் குடும்பத்தையும் ஒரு புள்ளியில் நேர்த்தியாக எடுத்து சொல்கிறது.

You May Also Like