சற்குணம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகை

கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் சற்குணம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
களவாணி, வாகை சூட வா படங்களை இயக்கிய சின்ன இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். கிராமத்துப் பின்னணியில் தயாராகும் இந்த படத்தில் அதர்வா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் அறிமுகமாகிறார்.

2016 ல் வெளிவந்த ‘கிரேஸி பாய்’ என்கிற கன்னட படத்தின் மூலம் திரையுலகுக்கு வந்தவர் ஆஷிகா ரங்கநாத். மாஸ் லீடர், ராம்போ 2, முகுலு நாகே உள்பட பல படங்களில் ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார்.
ஆஷிகா தற்போது கருடா, அவதார புருஷா, ரேமோ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக சற்குணம் இயக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.