Search
Search

“கோலிவுட் டாப் ஹீரோஸ்க்கு கதை ரெடி” – பிரபல நடிகர் வெளியிட்ட அறிக்கை!

கண்ணன் பொன்னையா, இவருடைய பெயரை கேள்விப்படவில்லை என்றாலும் இவர் புகைப்படத்தை பார்த்தால் அட இவரா என்று கேட்கும் அளவுக்கு ஒரு பிரபலமான நட்சத்திரம் தான் பொன்னையா. இவர் தூத்துக்குடியில் உள்ள உடன்குடி என்ற ஊரை சார்ந்தவர்தான்.

கண்ணன் பொன்னையா 90களில் இறுதியில் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்து இறுதியில் கௌதம் வாசுதேவன் அவர்களின் உதவி இயக்குனராக சேர்ந்தார். மின்னலே படம் தொடங்கி பல படங்களில் அவருடைய உதவி இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார்.

மேலும் அவருடைய காக்க காக்க படத்தில் தான் முதல் முதலில் சிறிய வேடத்தில் தோன்றினார். அதன் பிறகு சில்லுனு ஒரு காதல், கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, தற்பொழுது வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகின்ற பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பத்து தல திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து மெதுவாக மக்களை ஈர்த்து வருகிறார் பொன்னையா. அவர் அளித்த ஒரு பேட்டியில் நான் இயக்குனர் வாய்ப்பு தேடி தான் சென்னைக்கு வந்தேன். இப்பொழுது நடிப்பில் இறங்கிவிட்டேன்.

இருப்பினும் எனக்கு படங்களை இயக்க மிகவும் ஆர்வமாக உள்ளது, தளபதி விஜய், தல அஜித் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்காக பல கதைகள் எழுதி வைத்துள்ளேன். நிச்சயம் அதற்கான நேரம் வரும்பொழுது நான் அவர்களை வைத்து படங்களை இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

You May Also Like