Search
Search

பூஜையுடன் துவங்கியது கவினின் அடுத்த பயணம் – இயக்குனர் சதீஷ் ஆட்டம் ஆரம்பம்!

கடந்த சில வருடங்களாகவே தான் நடிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கவின் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியான அவருடைய டாடா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் நடன இயக்குனர் சதீஷ் அவர்கள் முதல்முறையாக இயக்குனராக களமிறங்கும் ஒரு புதிய திரைப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்க உள்ளார் நடிகர் கவின். அயோத்தி படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ப்ரீத்தி அசராணி இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் பூஜை தற்போது சென்னையில் நடைபெற்றுள்ளது, சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் மிஸ்கின் மற்றும் ஷெண்பகமூர்த்தி பங்கேற்றனர். ராக் ஸ்டார் அனிருத் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பது ஒரு மாபெரும் பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த தகவல்களை மன மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார் நடிகர் கவின். இன்னும் இந்த படத்தின் தலைப்பு வெளியிடப்படாத நிலையில் விரைவில் இந்த படத்திற்கான பணிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like