கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்

கீழாநெல்லி (Phyllanthus niruri) மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள ஒரு மூலிகை. இது அரை மீட்டர் உயரம் வரை வளரும். இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளில் கசப்புச்சுவை அதிகமாக இருக்கும்.

இந்தியாவின் எல்லா வெப்பமண்டல பகுதிகளில் வளரும். மஞ்சள்காமாலை, சர்க்கரை நோய், வயிற்றுப்புண் போன்ற நோய்களை குணப்படுத்தும்.

கீழாநெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது.

Advertisement

மஞ்சள் காமாலை

கீழாநெல்லி இலையை பறித்து நன்கு சுத்தம்செய்து அதன் இலையை அரைத்துக்கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு, மோர் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

சர்க்கரை நோய்

உலர்ந்த கீழாநெல்லி பொடியை தினமும் மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

வயிற்றுப்புண்

கீழாநெல்லி இலையை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து காலையில் குடித்து வந்தால், வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.

கல்லீரல் பாதுகாப்பு

மாதம் ஒருமுறை கீழாநெல்லி இலையில் சாறெடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேறி கல்லீரலை பாதுகாக்கும். இதனை பெரியவர்கள் 30 மில்லி அளவிலும் சிறியவர்கள் 15 மில்லி அளவிலும் குடித்து வர வேண்டும்.

சிறுநீரக பாதுகாப்பு

கீழாநெல்லியை சுத்தம்செய்து மூன்று மடங்கு அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் ஒரு பங்காக சுண்டியதும் அதனை குடிக்க வேண்டும். தினமும் ஒரு டம்ளர் அளவு இதனை குடித்துவர சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும். சிறுநீரகத்தில் தேங்கி உள்ள நச்சுக்கள் நீங்கி சிறுநீரகத்தை சிறப்பாக இயங்க வைக்கும்.

முடி உதிர்வு

அதிகமான முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் கீழாநெல்லி இலையை அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிர்வு சரியாகும்.

சரும பிரச்சனை

கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊற வைத்து குளித்து வந்தால் சரும வியாதிகள் மறையும்.

இது போன்று மருத்துவம், அனைத்து கீரைவகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.