ஒரு கிலோ தங்கத்தை அள்ளிக்கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தசரா. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தசரா திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தசரா படக்குழுவுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு கிலோ மதிப்புள்ள தங்கக்காசுகளை பரிசாக வழங்கியுள்ள தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது பணியாற்றிய சக நடிகர்கள், டெக்னீஷியன்கள், லைட் மேன்கள் மற்றும் டிரைவர்கள் உள்பட மொத்தம் 130 பேருக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கக்காசை பரிசாக வழங்கி இருக்கிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த செயலை பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.