குங்குமப்பூவின் ஆரோக்கிய நன்மைகள்

குங்குமப்பூ உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலா பொருளாக உள்ளது. இதனை சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் குங்குமப் பூவிற்கு ஸ்பெயின் நாட்டில் அதிக வரவேற்பு உள்ளது.

குங்குமப்பூவில் பத்மகாதி, பராசிகா, மதுகந்தி, பாதிகா, சர்கோல் என பல வகைகள் உள்ளது.

குங்குமப்பூ தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

நீங்கள் வாங்கும் குங்குமப்பூவை தண்ணீரில் போட்ட பிறகு உடனே சிவப்பு நிறமாக மாறினால் அது போலியானது என்று அர்த்தம். 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து நிறம் மாறினால் அது நல்ல குங்குமப்பூ என்று கண்டறியலாம்.

தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து அதில் சிறிதளவு குங்குமப்பூ போட்டால் உடனே மஞ்சளாக மாறும். அப்படி மாறாமல் வெளிர் சிவப்பு நிறத்தில் மாறினால் அது போலியானது.

குங்குமப்பூவை வாயில் வைத்துப் பாருங்கள். அதன் சுவை இனிப்பாக தெரிந்தால் அது போலியானது.

குங்குமப்பூவின் வாசனையை நுகர்ந்து பாருங்கள். இனிப்பு போன்று அல்லது தேன் போன்ற வாசனை வந்தால் அது ஒரிஜினல் குங்குமப்பூ.

குங்குமப்பூவில் இருக்கும் சத்துக்கள் கருவிழி தசைகளை வலுவடைய செய்யும்.

பாலில் குங்குமப்பூ கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சருமப் பொலிவு அதிகரிக்கும். மேலும் இது நிம்மதியான தூக்கத்தை தரும்.

கர்ப்பிணி பெண்கள் பாலில் குங்குமப்பூ கலந்து குடித்து வந்தால் குழந்தைகளின் வளர்ச்சியில் எந்த குறைபாடும் இருக்காது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது தவறான தகவல்.

குங்குமப்பூவில் உள்ள வேதிப்பொருள் வாந்தி உணர்வு கட்டுப்படுத்துவதால் இதனை கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல. மற்றவர்களும் இதனை குடிக்கலாம்.

குங்குமப் பூ தைலம் சிறிதளவு எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பிரகாசமாக மாறும்.

குங்குமப்பூ தீக்காயங்களை குணப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமின்றி காயம்பட்ட இடம் பழைய நிலைக்கு திரும்பவும் உதவுகிறது.

விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு குங்குமப்பூவும் நல்ல பலனைத் தருகிறது.

மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்கள் குங்குமப்பூ சாப்பிடுவதால், மூட்டு பலவீனம் நீங்கி மூட்டுக்கள் வலுவடைகிறது.

குங்குமப்பூவில் உள்ள மாங்கனீசு ஆஸ்துமாவை குணப்படுத்தும். பாரம்பரிய மருத்துவத்திலும் ஆஸ்துமாவுக்கு தயாரிக்கப்படும் மருந்தில் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.

Recent Post