Search
Search

படையப்பா பட நடிகைக்கு திருமணம் – 44 வயதில் துவங்கிய இனிய மணவாழ்க்கை

பிரபல தமிழ் சீரியலான ‘அருவி’ மூலம் பிரபலமான நடிகை தான் லாவண்யா தேவி, இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவந்த இவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். 44 வயதான லாவண்யா, பிரசன்னா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

லாவண்யா தேவி மற்றும் பிரசன்னா திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது, அவர்களுடைய திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய சினிமா வட்டார நண்பர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.

விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘சூர்ய வம்சம்’ படத்தின் மூலம் லாவண்யா தேவி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குடிப்பிடத்தக்கது. அவரது திறமையும் பன்முகத் திறனும் அவரை ஒரு சிறந்த நடிகையாக மாற்றியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, விஜய், அஜித், விக்ரம் மற்றும் மாதவன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். ‘படையப்பா’, ‘ஜோடி’, ‘சேது’, ‘திருமலை’, ‘வில்லன்’, ‘எதிரி’, ‘ரன்’, ‘சமுத்திரம்’, ‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்ட படங்கள் அவரது மறக்க முடியாத படங்களில் சில.

You May Also Like