சரும பிரச்சனைகளை தீர்க்கும் எலுமிச்சை பேஸ் பேக்

எலுமிச்சை பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. எலுமிச்சை உடலுக்குமட்டுமல்ல, சருமத்திற்கும் உதவுகிறது.

பெண்களுக்கு சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எலுமிச்சை பழம் மூலம் நிரந்தர தீர்வு காண முடியும்.

எலுமிச்சை பேஸ் பேக் தயாரிப்பது எப்படி?

Advertisement

தேவையான பொருட்கள்

எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்,

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

முட்டையின் வெள்ளை கரு – ஒன்று

செய்முறை

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சுமார் 20 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.

பிறகு நீரால் முகத்தை கழுவி விட வேண்டும். இதேபோல் வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும். சருமம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து பிறகு, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் சருமம் நன்றாக ஜொலிக்கும்.

எலுமிச்சை சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகள் மறைந்து, சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.