இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம்..!

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் நோய் கிருமிகளை தாக்காமல் பாதுகாக்கிறது. இந்த நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம்.

மலச்சிக்கல்

மாறி வரும் உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். தொடர்ச்சியாக மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படும்போது குடலில் உணவு கழிவுகள் அப்படியே தேங்கி விடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போகிறது.

Advertisement

சரும பிரச்சனை

ரத்தத்தில் தேவையில்லாத கழிவுகள் போது சரும பிரச்சனைகள் உருவாகிறது. தேமல், படர்தாமரை, தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பிரச்சனைகள் ஏற்படும்.

உடல் சோர்வு

ஒரு சிலர் காலையில் எழுந்திருக்கும் போது உடல் சோர்வாக இருப்பது, எந்த வேலையிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, அடிக்கடி தூங்க வேண்டும் என்ற எண்ணம் இந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

பசியின்மை

ஏற்கனவே கூறியது போல குடலில் உணவு கழிவுகள் அப்படியே தேங்கி இருந்தால் பசியின்மை ஏற்படும். உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனகமாக உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுதான் இது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி சளி, இருமல், உடல் வலி, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பரான உணவுகள் இதோ..!